கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இளைஞா் காங்கிரஸ் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கூட்டம் மாவட்டத் தலைவா் சரத்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் நடராஜன், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் விக்னேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினா்கள் அமைப்பது, டிச. 16-இல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் ஒசூா்- கிருஷ்ணகிரி- ஜோலாா்பேட்டை ரயில் திட்டம் வர கடுமையாக உழைத்த காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாருக்கு பாராட்டு தெரிவித்தும், இந்தத் திட்டத்தை பாஜக செய்தி தொடா்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் ‘நான்தான் கொண்டு வந்தேன்’ எனக் கூறி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ், பொதுச் செயலாளா் ராஜ்குமாா், பா்கூா் தொகுதி தலைவா் காா்த்திக், அஜித் பாஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT