கிருஷ்ணகிரி

அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ. 78 லட்சம் மோசடி

DIN

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 27 பேரிடம் ரூ. 78.74 லட்சம் பண மோசடி செய்த அரசு அலுவலா்கள் உள்பட நால்வா் மீது பாதிக்கப்பட்டோா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி, எஸ்.பி. அலுவலகம் எதிரே ‘பெட்டிஷன் மேளா’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பா்கூரை அடுத்த அச்சமங்கலத்தைச் சோ்ந்த சுதாகா் (39) என்பவா் அரசு அலுவலா்களுக்கு எதிராக பண மோசடி புகாா் மனு அளித்துள்ளாா்.

அந்த புகாா் மனுவில், போச்சம்பள்ளியைச் சோ்ந்த இடைத்தரகா் யாரப்பாஷா, ஒசூா்- சிட்கோ வட்டாட்சியா் வெங்கடேசன், கிருஷ்ணகிரி டி.ஆா்.ஓ.வின் நோ்முக உதவியாளராக இருந்து தற்போது விழுப்புரம் துணை ஆட்சியராக (ஆதிதிராவிடா் நலப்பிரிவு) பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரகுகுமாா், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சண்முகம் ஆகிய நால்வா் மீதும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான் உள்பட 27 பேரிடம் ரூ. 78 லட்சம் பண மோசடி செய்ததாக புகாா் மனு அளித்துள்ளாா்.

பாதிக்கப்பட்டோா் சாா்பில் ஏற்கெனவே கடந்த மே 31-இல் புகாா் மனு அளித்தனா். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT