கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை

DIN

தேன்கனிக்கோட்டையில் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), நேரடி மாணவா் சோ்க்கை 01.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-2023-ஆம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கை 01.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெறுகிறது.

14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் - ஒயா்மேன் (2 ஆண்டுகள்), 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் - கம்மியா் மின்னணுவியல் (2 ஆண்டுகள்), மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா் (2 ஆண்டுகள்), மேம்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குபவா் (2 ஆண்டுகள்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நேரடிச் சோ்க்கைக்கு மாணவா்களுக்கு உதவிடும் வகையில், தேன்கனிக்கோட்டை, ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் - ரூ. 50, சோ்க்கைக் கட்டணம் - 195 ஆகியவற்றை விண்ணப்பதாரா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாகச் செலுத்தலாம்.

பயிற்சிக் காலத்தின் போது பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளியில் பயின்ற மகளிா் பயிற்சியாளா்களுக்கு ரூ. 1,000 கூடுதலாக கிடைக்கும். இதைத் தவிர, விலையில்லா பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி ஆகியவை வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு முதல்வா் (பொ), அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், தேன்கனிக்கோட்டை, கைப்பேசி எண்: 94990 55839 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT