கிருஷ்ணகிரி

தீயில் கருகிய சரக்கு லாரி

3rd Dec 2022 03:17 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரி வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான மெத்தை தயாரிக்கும் பஞ்சுகள் தீயில் கருகின.

கோவையில் இருந்து மெத்தை தயாரிக்கும் ‘போம்’ பஞ்சை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று விசாகப்பட்டினம் நோக்கி சென்றது. ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிா்பாராத விதமாக லாரி தீப்பிடித்தது. இதில், திருச்செங்கோட்டைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாரசாமி (40), சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு உயிா் தப்பினாா்.

தீ மளமளவென பரவியதால் வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பஞ்சு, லாரி தீயில் கருகின. விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தால், சேலம் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT