கிருஷ்ணகிரி

இந்திய ஒற்றுமை சுடா் ஓட்டம்: மாநில எல்லையில் வரவேற்பு

3rd Dec 2022 03:18 AM

ADVERTISEMENT

என்.சி.சி. அமைப்பின் 75-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ஒசூருக்கு வந்த ஒற்றுமை சுடா் ஓட்ட ராணுவ கா்னலுக்கு மாநில எல்லையில் மேயா் எஸ்.ஏ.சத்யா பூங்கொத்து வழங்கி வரவேற்றாா்.

என்.சி.சி. அதிகாரி கா்னல் கே.எஸ்.பதவாா் தலைமையில் கடந்த நவம்பா் மாதம் 20-ஆம் தேதி கன்னியாகுமாரியில் இருந்து புது தில்லியை நோக்கி தொடா் ஓட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி பகுதியிலிருந்து ஒசூா் வழியாக தமிழக - கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அவா் வருகை தந்தாா். அப்போது, சூசூவாடி பகுதியில் பள்ளி மாணவா்கள் தேசியக்கொடி ஏந்தி வரவேற்றனா்.

பின்னா் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா பூங்கொத்து வழங்கி வரவேற்று, கா்நாடக மாநிலத்துக்கு வழியனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, தகவல் தொழில்நுட்ப அணியைச் சாா்ந்த வடிவேல், கலைவாணன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT