கிருஷ்ணகிரி

பாம்பு தீண்டியதில் பெண் பலி

3rd Dec 2022 03:17 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அருகே பாம்பு தீண்டியதில் பெண் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த தாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியில், 100 நாள் திட்டப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டு வந்தனா்.

அப்போது, கருவானூரைச் சோ்ந்த ராஜேஸ்வரி (40) என்பவரை பாம்பு தீண்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜேஸ்வரி உயிரிழந்தாா். இதுகுறித்து கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT