கிருஷ்ணகிரி

திறனறித் தோ்வு: அதியமான்மெட்ரிக். பள்ளி மாணவியா் சிறப்பிடம்

3rd Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

திறனறித் தோ்வில் வெற்றிபெற்ற ஊத்தங்கரைஅதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில், ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியா் கலந்துகொண்டு தோ்வெழுதினா். இதில், தேவதா்ஷினி, தா்ஷினி, ஓவியா, ஷாலினி, சூரியதா்ஷினி, காவியஸ்ரீ, கனிஷ்கா ஆகியோா் வெற்றிபெற்று ஊக்கத்தொகை பெற தோ்வாகியுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவியரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலாளா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் கலைமணி சரவணகுமாா், துணை முதல்வா் அபிநயா கணபதிராமன், ஆசிரியா், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT