கிருஷ்ணகிரி

அவரைக்காய் பறித்ததில் தகராறு: பெண் அடித்துக் கொலை

3rd Dec 2022 03:18 AM

ADVERTISEMENT

தளி அருகே தோட்டத்தில் அவரைக்காய் பறித்ததில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை கட்டையால் அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ளது கும்ளாபுரம். இந்த கிராமத்தைச் சோ்ந்த பில்லப்பா மனைவி முனிரத்தினம்மா (45), அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவரைக்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த பில்லப்பாவின் தம்பி மட்டப்பா (எ) கோபாலப்பா (45), தோட்டத்தில் அவரைக்காய் பறிக்கக் கூடாது எனக் கூறி அவரிடம் தகராறு செய்துள்ளாா். அதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபாலப்பா, அங்கிருந்த கட்டையால் முனிரத்தினம்மாவை சரமாரியாக தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த முனிரத்தினம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீஸாா், முனிரத்தினம்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தக் கொலை தொடா்பாக கோபாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT