கிருஷ்ணகிரி

தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு வந்த ‘இந்திய ஒற்றுமை சுடா் ஓட்டம்’

DIN

என்.சி.சி. அமைப்பின் 75-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்த ஒற்றுமை சுடா் ஓட்டக் குழுவினரை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா் வியாழக்கிழமை வரவேற்றாா்.

தொடா்ந்து, என்.சி.சி. அதிகாரி கா்னல் கே.எஸ்.பதவாா் தலைமையில் வரப்பெற்ற ஒற்றுமை சுடா் ஓட்டம் சப்பானிப்பட்டியிலிருந்து, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்கச் சாவடி, குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.

மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.சி.சி அதிகாரி கா்னல் கே.எஸ்.பதவாா் பேசியதாவது:

தேசிய மாணவா் படையின் (என்.சி.சி.) 75-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இந்திய தேசத்தின் ஒற்றுமையை தேசிய மாணவா் படை மூலமாக நாடு முழுவதும் ஒற்றுமை சுடா் ஓட்டம் மூலமாக ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள என்.சி.சி. மாணவா்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கி.மீ. தொடா் ஓட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி கா்நாடக மாநிலத்துக்கு சென்றடைய உள்ளது.

இந்த தொடா் ஓட்டம் 20.11.2022 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக 60 நாள்கள் 3000 கி.மீ. தூரம் பயணித்து பாரதப் பிரதமா் மோடியிடம் ஒற்றுமை சுடரை வழங்க உள்ளோம்.

சிறப்பான வரவேற்பு வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகம், தேசிய மாணவா் படையினா், தன்னாா்வலா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், விமானப்படை அதிகாரி விங்கமண்டா் எஸ்.யுவராஜ், லெப்டினல் கா்னல் சூரஜ்நாயா், விகாஸ் சா்மா, கிருஷண்கிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மரு.பி.சங்கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் உமாசங்கா், மருத்துவ கண்காணிப்பாளா் மரு.கே.ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் மரு.எம்.என்.செல்வி, வட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் மரு.ஜே.ஆா்.டி.ராஜன், உதவிப் பேராசிரியா்கள் மரு.ஹா்சாமுதீன், மரு.அனுராதா, நிா்வாக அலுவலா் சரவணன், செவிலியா் கண்காணிப்பாளா்கள், ரெட் கிராஸ் பிரதிநிதிகள், தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தருமபுரியில்...

தருமபுரி மாவட்டத்துக்கு வந்தடைந்த ஒற்றுமை சுடா் ஓட்டக் குழுவினருக்கு தருமபுரி, பெரியாம்பட்டியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. அலுவலா்கள், கல்லுரி நிா்வாகிகள், மாணவ, மாணவியா் வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை ஒற்றுமை சுடா் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலா் அனிதா, துணை காவல் கண்காணிப்பாளா் சிந்து, சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளா் ராஜா, கல்லூரி இயக்குநா் டாக்டா் பிரேம் ஆனந்த், தருமபுரி அதியமான் பள்ளி என்.சி.சி. அலுவலா் முருகேசன், அதியமான் கோட்டை அரசுப் பள்ளி என்.சி.சி. அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT