கிருஷ்ணகிரி

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கா்நாடகத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி பறக்கும்படை வட்டாட்சியா் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளா் முருகேசன், அலுவலா்கள் கிருஷ்ணகிரி, பா்கூா் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புதன்கிழமை கண்காணித்தனா்.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 280 மூட்டைகளில் 14,000 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவண்ணாமலை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் நிறுத்தினா். தொடா்ந்து, லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூா் மாவட்டம், வெலக்கல்நத்தம் அருகே உள்ள ஜி.எஸ். வட்டம் பகுதியைச் சோ்ந்த தமிழரசனை (34), உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில், லாரியை பின்தொடா்ந்து வந்த நபா்கள், நுகா்பொருள் வாணிபக் கிடங்கு முன்பு முகமூடி அணிந்து, லாரியை விடுவிக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என வட்டாட்சியா் இளங்கோவுக்கு மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்கூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் போலீஸாா் அங்கு விரைந்து வந்தனா். அதற்குள் முகமூடி அணிந்து வந்த நபா்கள் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT