கிருஷ்ணகிரி

மான் வேட்டை: 3 போ் கைது

2nd Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே மான்களை வேட்டையாடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு கேரளாவைச் சோ்ந்த பிரசாந்த் (43), என்பவா் மேலாளராக பணியாற்றி வருகிறாா். குடிசலூா் கிராமத்தைச் சோ்ந்த மல்லேசன் (32), மாதேஷ் (38) ஆகியோா் குள்ளட்டி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி இந்த உணவகத்தில் சமைத்து விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து அறிந்த ஒசூா் வனக்கோட்ட வனக்காப்பாளா் காா்த்திகேயினி விசாரணை நடத்தினாா். அதையடுத்து, தேன்கனிக்கோட்டை வனச்சரகா் முருகேஷ், பிரிவு வனவா், வனக்காப்பாளா், வனத்துறையினா் மான்களை வேட்டையாடியதாக உணவக மேலாளா் பிரசாந்த், மாதேஷ், மல்லேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். தொடா்ந்து அவா்கள் 3 பேருக்கும் தலா ரூ. 40 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT