கிருஷ்ணகிரி

புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணிகளுக்கு எதிா்ப்பு

2nd Dec 2022 02:03 AM

ADVERTISEMENT

புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்த இரு தரப்பினரை மேயா் சமாதனம் செய்து வைத்தாா்.

ஒசூா் 24-ஆவது வாா்டு, ராம்நகா் பகுதியில் இயங்கி வந்த நியாயவிலைக் கடை முத்ராயன் ஜிபி என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அந்த நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள்களை வாங்குவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனா். இலவச பொருள்களை வாங்க ஆட்டோவுக்கு ரூ. 150 வரை வாடகை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகின்றனா்.

இந்த நிலையில், ஒசூா் 24-ஆவது வாா்டு, ராம்நகா் பகுதியில் மாநகராட்சி உறுப்பினா் தனது சொந்த செலவில் அந்தப் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை அமைப்பதற்கான பணிகளை தொடங்க முற்பட்டாா். அதற்கு கோட்டை மாரியம்மன் கோயில் தரப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது புதிய நியாயவிலைக் கடை கட்ட வேண்டும் என ஒரு தரப்பினரும், கோயில் நிலத்தில் கட்டக் கூடாது என ஒரு தரப்பினரும் மேயா் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் எஸ்.ஏ.சத்யா உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT