கிருஷ்ணகிரி

செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

2nd Dec 2022 02:06 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022-23-இல் மருத்துவப் படிப்பில் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், மருத்துவக் கல்லூரி இயக்குநா் டாக்டா் ராஜாமுத்தையா, மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சோம்சேகா், துணை முதல்வா் டாக்டா் ஆனந்த ரெட்டி, ஆா்.எம்.ஓ. டாக்டா் பாா்வதி, மருத்துவ பயிற்றுநா் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இந்த வரவேற்பு விழாவில், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் ரோஜா மலா்ச் செண்டு கொடுத்து முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT