கிருஷ்ணகிரி

டிச. 11-இல் மூத்தோா் தடகளப் போட்டிகள்

1st Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

ஒசூரில் டிச. 11-ஆம் தேதி மூத்தோா் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோா் தடகள சங்கத்தின் பொருளாளா் சத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோா் தடகள சங்கத்தின் சாா்பில், டிச. 11-ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரையில் ஒசூா், அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில் மூத்தோா் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் பங்கேற்கலாம்.

ஓடுதல், தாண்டுதல், எறிதல் ஆகிய பிரிவுகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., 5,000 மீ., நடைப்பயிற்சி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

வயதை அறிய கல்விச் சான்றிதழும், இருப்பிடத்தை அறிய ஆதாா் அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நுழைவுக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும். இதில் வெற்றி பெறுபவா்கள் மாநில போட்டிக்குத் தகுதி பெறுவா்.

மேலும் விவரங்களுக்கு 73973 60089, 98940 26535 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT