கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சிப் பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும்

1st Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சிப் பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என ஒசூா் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் கல்விக்குழு கூட்டம் ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கல்விக்குழு தலைவா் ஸ்ரீதரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள 44 நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாமன்ற உறுப்பினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதித்தனா். இதில், பள்ளிகளின் கல்வித்தரம், சுற்றுச்சூழல் மேம்படுத்துவது, சுற்றுச்சுவா் இல்லாத நகராட்சிப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தருவது, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் பேசியதாவது:

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு சிறந்த கல்வியை போதிப்பது, ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாக இருக்க வேண்டும். முறையாக சுகாதாரத்தை பாதுகாப்பது, முன்மாதிரியான பள்ளிகளாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒசூா் மாநகராட்சிப் பள்ளிகளின் நிலவும் தூய்மை, சுகாதார மேம்பாட்டு அம்சங்களை தமிழகத்துக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மாநகராட்சிப் பள்ளிகளில் கழிப்பிடக் கட்டடம், தூய்மை, வகுப்பறைக் கட்டடம், கட்டட பராமரிப்புப் பணிகள் என 34 பணிகளுக்கு ரூ. 5.9 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT