கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

1st Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

கல்லாவி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கல்லாவியை அடுத்த புங்கனை கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (35), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா். இதையடுத்து, அந்த மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

மாணவியின் பெற்றோா் கல்லாவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுதா தீா்ப்பு வழங்கினாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT