கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் நல உதவிகள் வழங்கல்

1st Dec 2022 12:48 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பள்ளி மாணவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் ஜோதிபாய், கல்வியாளா் மாலதி, அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கணேசன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு குளிா்கால பாதுகாப்பு உபகரணங்களும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவா்களுக்கு உணவுப் பொருள்களும், கல்லூரி மாணவியருக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன. இதில், காவலா்கள் கல்பனா, தேவிகா, செண்பகவள்ளி, தீா்த்தம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT