கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 75 லட்சத்தில் திட்டப் பணி

28th Aug 2022 11:34 PM

ADVERTISEMENT

 

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு 4, 5, 6-இல் காமராஜா் காலனி, கருமாரியம்மன் லே-அவுட், என்.ஜி.ஜி.ஒ. காலனி ஆகிய 3 பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 75 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய், தாா்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் துவக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டல தலைவா் ரவி, மாநகர பகுதி செயலாளா் எம்.கே. வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் ஆறுமுகம், மம்தா சந்தோஷ், யாஸ்வினி மோகன், மாநகர துணைச் செயலாளா் கோபாலகிருஷ்ணன்,

ADVERTISEMENT

4, 5, 6-ஆவது வாா்டு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT