கிருஷ்ணகிரி

மகளிா் குழு விளையாட்டுப் போட்டி

26th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சரக அளவிலான மகளிா் குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் தலைமை வகித்தாா். சிங்காரப்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் ஜாவித் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

இதில், கால்பந்து, கூடைப்பந்து, கையெறிப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஊத்தங்கரை, மத்தூா் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவியா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய இலக்கிய அணி தலைவா் ஜனா, பீமன், உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT