கிருஷ்ணகிரி

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் பொறியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

26th Aug 2022 10:55 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக உள்ள பொறியாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நிா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக உள்ள நீா்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினா் (பொறியாளா்) பணிக்கு பி.இ. (சிவில்) அல்லது டிப்ளமோ (சிவில்) படித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கெனவே, மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை திட்ட அலுவலா், மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, அறை எண் 126, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் ஆக. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT