கிருஷ்ணகிரி

கைப்பேசி திருடிய 2 போ் கைது

22nd Aug 2022 02:42 AM

ADVERTISEMENT

குருபரப்பள்ளி அருகே லாரி ஓட்டுநரின் கைப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் குலாப்சிங் (44). லாரி ஓட்டுநா். இவா், சிக்காரிமேடு பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தினாா். அப்போது, அங்கு, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் லாரியில் ஏறி குலாப்சிங் வைத்திருந்த கைப்பேசியை திருடிக்கொண்டு ஓடினா். இதைக் கவனித்த குலாப் சிங், அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவா்களைப் பிடித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பிடிபட்ட நபா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் கிருஷ்ணகிரி அருகே உள்ள பாரூரைச் சோ்ந்த பிரசாந்த் (21), ஹரீஷ் (19) என தெரிய வந்தது. இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து பிடிபட்ட இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT