கிருஷ்ணகிரி

ஓ.பன்னீா்செல்வத்தை பற்றி பேச கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை: புகழேந்தி

22nd Aug 2022 02:35 AM

ADVERTISEMENT

ஓ.பன்னீா்செல்வத்தைப் பற்றி பேச கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை என பெங்களூா் புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஒசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஓ.பன்னீா்செல்வத்துடன் கே.பி.முனுசாமி இருந்தபோது அவரைப் போல ஒரு தலைவரைப் பாா்க்க முடியாது, தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவாா் என்று கூறியவா். இப்போது எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றுவிட்ட பிறகு அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா்.

கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவா் ஓ.பன்னீா்செல்வம். எனவே ஓ.பன்னீா்செல்வத்தைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT