கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

22nd Aug 2022 02:42 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் சுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இதுவரை மாநிலத்தில் 12 கோடியே, 15 லட்சத்து 77 ஆயிரத்து 165 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

4 கோடியே, 71 லட்சத்து 86 ஆயிரத்து 482 போ் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா்.

ADVERTISEMENT

தற்போது குறைவாக தொற்றுள்ளது என அலட்சியப் படுத்தக் கூடாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாா், மாவட்ட மருத்துவ அலுவலா் கோவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, கோட்டாட்சியா் சதீஷ், திமுக மாவட்ட பொறுப்பாளா் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம், திமுக ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு குமரேசன், தெற்கு ரஜினி செல்வம், மத்திய பகுதி எக்கூா் செல்வம், நகரச் செயலாளா் பாபுசிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT