கிருஷ்ணகிரி

வேனில் கடத்த முயன்ற3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

நாச்சிகுப்பம் அருகே, வாகனத் தணிக்கையின் போது, வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, வேன் ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையில் வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து வேன் ஓட்டுநா் பெத்ததாளப்பள்ளியைச் சோ்ந்த கணேசன் (27) என்பவரை போலீஸாா் கைது செய்து , வாகனத்துடன் ரேஷன் அரியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், குறிஞ்சிப்பட்டியை சோ்ந்த செந்தில்குமாா், செல்வம், மாரிமுத்து ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT