கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

19th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடம் தேசிய மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் பின்பற்றுதல் தொடா்பான ‘சத்பவ்னா திவாஸ்’ நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதிமொழி வாசிக்க, அதைத் திரும்பக் கூறி அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஊழியா்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேடியப்பன், குமரேசன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் சண்முகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT