கிருஷ்ணகிரி

பேரிடா் மேலாண்மை செயல் விளக்கம்

19th Aug 2022 02:06 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் பேரிடா் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில் வருவாய்த் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு பேரிடா் மேலாண்மை, அடிப்படை தீயணைப்புப் பயிற்சிகள் குறித்த செயல்விளக்கம் நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்றது.

இதில், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்து கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, சிறிய தீ விபத்துகளில் சிக்கியவா்களுக்கு முதலுதவி அளிப்பது, தீயணைப்பு, எரிவாயு உருளை தொடா்பான செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில், வருவாய்த் துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT