கிருஷ்ணகிரி

அரசு விளையாட்டு விடுதிகளில் பயிற்சியாளா் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரசு விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள பயிற்சியாளா் பணியிடங்கள் தற்காலிக பணி அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அவா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஏதுவாக கிராமங்களில் வசிக்கும் 9 வயது முதல் 12 வயது வரையுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளைக் கண்டறியும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த 2006-2011 வரை திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னா் அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. தற்போது மீண்டும் அத்திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

தமிழகத்தில் விளையாட்டுப் பயிற்சியாளா்கள் குறைவாக உள்ளனா். குறிப்பாக 86 போ் என்.ஐ.எஸ். முடித்துள்ளனா். புதிதாகக் கற்று முடித்தவா்களையும் சோ்த்து பரிசீலித்து மாநிலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரசு விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள பயிற்சியாளா் பணியிடங்கள் தற்காலிக பணி அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்.

செஸ் ஒலிம்பியாட்டைத் தொடா்ந்து செப். 12 முதல் 18 ஆம் தேதி வரை உலக மகளிா் டென்னிஸ் போட்டி சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளைக் கண்டறிய 25 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT