கிருஷ்ணகிரி

கால்நடை மருத்துவா் பணிக்குவிண்ணப்பிக்கலாம்

DIN

தேன்கனிக்கோட்டையில் கால்நடை மருத்துவா் பணியிடத்துக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பொது மேலாளா் வசந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (2022-2023) தேன்கனிக்கோட்டையில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கால்நடை மருத்துவா் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

மாத ஊதியம் (அனைத்துப் படிகள் உள்பட) ரூ. 43,000 வழங்கப்படும். நோ்முகத் தோ்வு ஆக. 23-ஆம் தேதி, கிருஷ்ணகிரி ஒன்றிய நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கல்வித் தகுதியாக பி.வி.எஸ்சி., படித்து, இரு சக்கர வாகனம், ஓட்டுநா் உரிமம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் அனைத்து உண்மை சான்றிதழ்களுடன் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT