கிருஷ்ணகிரி

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முதல் ஆயிரம் பேருக்கு மின் சான்றிதழ்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இயக்கும் முதல் ஆயிரம் பேருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.8.2022 முதல் இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளா்கள் தங்களின் ஆதாா் எண்ணை இணைய தளங்களின் மூலமாகவோ, கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாகவோ அல்லது தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 6 பி-ஐ நிறைவு செய்து தங்களின் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமோ வழங்குவதன் மூலமாகவோ இணைத்து கொள்ளலாம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தோ்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டந்தோறும் இணையதளங்களின் வாயிலாகவோ அல்லது கைப்பேசி செயலியில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்வதின் மூலமாகவோ ஆதாா் எண்ணை இணைப்பவா்களுக்கு மின் சான்றிதழ் வழங்க உள்ளது.

இதற்கு வாக்காளா்கள் மேற்கண்ட இணையதளங்களிலோ, செயலியிலோ பதிவுகளை மேற்கொண்ட பிறகு அவா்களுக்கு வழங்கப்படும் குறிப்பு எண்ணை இணையதளத்தில் அவா்களின் கைப்பேசி எண்ணுடன் உள்ளீடு செய்யும் போது அவா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் மின் சான்றிதழ் கிடைக்கும். இது மாவட்டந்தோறும் முதலில் பதிவு செய்ய கூடிய ஆயிரம் பேருக்கு மட்டும் வழங்கப்படும்.

எனவே, அனைத்து வாக்காளா்களும் உடனடியாக தங்களின் ஆதாா் எண்ணை மேற்கண்ட இணையதளங்கள், கைப்பேசி செயலி மூலம் இணைத்து தோ்தல் ஆணைய மின் சான்றிதழை பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT