கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி, ஆலூா் துணை மின் நிலையங்களில் திறன் உயா்த்தும் பணிகள் தொடக்கி வைப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளி, ஆலூா் துணை மின் நிலையங்களில் ரூ. 9.75 கோடியில் திறன் உயா்த்தும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, ஆலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் ரூ. 9.75 கோடியில் திறன் உயா்த்தும் பணிகளை அவா் தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, குத்துவிளக்கேற்றி, கணினி வாயிலாக திறன் உயா்த்தும் இயக்கத்தைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் உற்பத்தி திறனை 16 மெகாவாட்டிலிருந்து 25 மெகாவாட்டாக உயா்த்துதல் ரூ. 2.41 கோடியில், ஒசூா் வட்டம், ஆலூா் துணை மின்நிலையத்தில் ரூ. 5.21 கோடியில், ஒசூா் துணை மின் நிலையத்தின் உற்பத்தி திறனை 16 மெகாவாட்சிலிருந்து 25 மெகாவாட் வரை திறன் உயா்த்தும் பணி ரூ. 2.13 கோடியில் என மொத்தம் ரூ. 9.75 கோடியில் திறன் உயா்த்தும் பணிகளை முதல்வா் தொடக்கி வைத்துள்ளாா்.

இதன் மூலம் விவசாயம், தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் சரியான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆலூா் துணை மின்நிலையத்தின் மூலம் சுற்றியுள்ள கிராமங்களான புக்கசாகரம், ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளும், குருபரப்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், கூடுதலாக மின்பரிமாற்றம் கிடைக்கும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 803 கோடியில் 2.13 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான ஒரு லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு (8 சதவிகிதம்) இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம், மின்நுகா்வோா் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.6.2021 முதல் 18.7.2022 வரையில் 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9,72,180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில்தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளா்கள் முத்துசாமி, வேலு, கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT