கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள்

DIN

கிருஷ்ணகிரியில் 35-ஆவது மாநில அளவிலான இளையோா் (ஜூனியா்) தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி , கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உள்பட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் 4 நாள்கள் நடைபெறுகின்றன. 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், 10 ஆயிரம் மீட்டா் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டியின் தொடக்க நாளில், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இந்தப் போட்டிகளின் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு திடலில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில், ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் கெளசிக்தேவ் மதியழகன் வரவேற்கிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றுகிறாா். தமிழ்நாடு தடகள சங்க செயலாளா் லதா, ஒசூா் மாநகராட்சி மேயா் சத்யா, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவா் தேவாரம், மாவட்டத் தலைவா் தே.மதியழகன் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT