கிருஷ்ணகிரி

ஒசூா் உழவா் சந்தையில் 25 விவசாயிகளுக்கு உழவா் அட்டை வழங்கல்

DIN

ஒசூா் உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக 25 விவசாயிகளுக்கு உழவா் அட்டையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒசூா் உழவா் சந்தையில் உழவா் அட்டை 25 பேருக்கும், உணவு தரக் கட்டுப்பாடு சான்றிதழ் 50 பேருக்கும் வழங்கினாா்.

தமிழக அரசு நெகிழி பொருள்களை ஒழிக்க ஒசூா் மாநகராட்சி சாா்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காய்கறிகளை வாங்க வந்த 2,000 பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினாா். இதில் மாவட்ட திமுக அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், ஒசூா் மாநகர திமுக கிழக்கு மண்டல செயலாளா் ராமு, அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT