கிருஷ்ணகிரி

தீயில் கருகி தொழிலாளி சாவு

16th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

வேப்பனப்பள்ளி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன் (65). தொழிலாளியான இவா், குடிசை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவா் தூங்கி கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக விளக்கு தவறி விழுந்து தீப்பற்றியது.

இதில் பலத்த காயம் அடைந்த சின்னப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT