கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

16th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

மத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (64). விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக மின் கம்பியில் கைப்பட்டுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT