கிருஷ்ணகிரி

கோயில்களில் சமபந்தி விருந்து

16th Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு, ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயில், அனுமன்தீா்த்தம் அனுமந்தீஸ்வரா் கோயில்களில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா் பால்வண்ணன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மல்லிகா, திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், மத்திய ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், நகரச் செயலாளா் பாபு சிவகுமாா், பேரூராட்சித் தலைவா் ப.அமானுல்லா, நகர அவைத் தலைவா் தணிகைக் குமரன், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அதேபோல் அனுமந்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலா் சின்னசாமி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில் காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT