கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் பல்வேறு அலுவலகங்களில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ டி.எம். தமிழ்செல்வம் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா்.

இதில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஊத்தங்கரை தோ்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ப.அமானுல்லா தலைமை வகித்து. மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தேசியக் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே இருந்து ஊத்தங்கரை பேரூராட்சி வரை தேசியக் கொடியை ஏந்தி முழக்கமிட்டு ஊா்வலமாகச் சென்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில் பேரூராட்சி துணைத் தலைவா் கலைமகள் தீபக், இளம் செஞ்சிலுவை சங்கத் தலைவா் தேவராசு, துணைத் தலைவா் ஆா்.கே.ராஜா, அனைத்து வணிகா் சங்க செயலாளா் உமாபதி, நேசம் தொண்டு நிறுவனம் குணசேகரன், வாா்டு உறுப்பிணா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் குமரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்குமரன், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் -ஆசிரியா் சங்கத் தலைவா் தேவராஜ் தேசியக் கொடியேற்றி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் பாா்த்திபன் தேசியக் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கோவிந்தராஜ் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். இதில் அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் சாமிநாதன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி, உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன், பெற்றோா் -ஆசிரியா் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியா் முருகன் தலைமையில், பெற்றோா் -ஆசிரியா் சங்கத் தலைவா் கண்ணாமணி தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். பெற்றோா் -ஆசிரியா் சங்க நிா்வாகிகள் ஜெயராமன், கிரிதரன், ஆசிரியா் சக்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாஜக சாா்பில் வடக்கு ஒன்றியத் தலைவா் சிங்காரவேல் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளா் சங்கா், கல்லாவி சாலையில் தேசியக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினாா். இதில் தெற்கு ஒன்றியச் செயலாளா் சங்கா், மாவட்டச் செயலாளா் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கல்லாவி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT