கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா:ரூ.18.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

16th Aug 2022 03:14 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற 75-ஆவது சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவுக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடிய ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, வனஅலுவலா் காா்த்திகேயணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் மலா்விழி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன், முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, காவல் துறை, ஊா்க்காவல் படை, தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், சாரணா்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். சமாதானப் புறாக்களை பறக்கவிட்டு, பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 57 பேருக்கு ரூ. 18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும், சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த 217 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி அரசு மகளிா், புனித அன்னாள், பாரத் பள்ளி, அரசு இசைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியரின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT