கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரூ. 2.23 கோடியில்திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரியில் ரூ. 2.23 கோடியில் ஏரி புனரமைப்பு மற்றும் நவீன எரியூட்டும் மயான பணிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட தாசகவுண்டன் ஏரியில் (பாப்பாரப்பட்டி ஏரி) நகா்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-23-இன் கீழ் ரூ. 79 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணியை அமைச்சா்கள் ஆா். காந்தி, அர.சக்கரபாணி ஆகியோா் தலைமை வகித்து பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி கூறியதாவது:

நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி நகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தாசகவுண்டன் ஏரியை ரூ. 79 லட்சம் மதிப்பில் புனரமைத்தல், கரைகளைப் பலப்படுத்துதல், ஏரியின் பக்கவாட்டில் கால்வாய் அமைத்தல், 719 மீட்டா் நீளம் கிரில் கைப்பிடி அமைத்தல், 25 மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, நேதாஜி சாலையில் உள்ள மயானத்தில் ரூ. 1.44 கோடி செலவில் எரியூட்டும் அறை, ஈமச் சடங்கு செய்யும் அறை, அலுவலக அறை, எரிவாயு, ஜெனரேட்டா் அறை, கழிவறை, சுற்றுச்சுவா் என அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன எரிவாயு கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஸ்குமாா், முன்னாள் எம்எல்ஏ பி.செங்குட்டுவன், நகராட்சி ஆணையா் (பொ) சரவணன், வட்டாட்சியா் நீலமேகன், திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT