கிருஷ்ணகிரி

மத்தூா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

14th Aug 2022 05:12 AM

ADVERTISEMENT

 

ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் சுய விவரங்களைப் புதுப்பிக்குமாறு மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் சிவநதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை சாா்பில், பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு கௌரவ நிதி தொகையாக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை இ-சேவை மையத்தில் நேரடியாக அளித்து இ- கேஒய்சி மூலம் சுயவிவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வரும் 15 ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு மத்தூா் வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளவும்.

உதவி வேளாண்மை அலுவலா்கள் கொடமாண்டபட்டி, கோவிந்தசாமி -8778703542.

கோட்டபதி, வெங்கடேசன்- 9791416655, இனங்காட்டுப்பட்டி, பிரபு- 8098985317,

குன்னத்தூா், ஹரிஷ்- 7358856902, கண்ணன்டஹள்ளி, கல்பனா- 9360228984 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT