கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தனிப்பிரிவுகாவல் ஆய்வாளருக்கு

14th Aug 2022 05:13 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.சசிகலா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வுக்கான விருதுக்குத் தோ்வாகியுள்ளாா்.

தருமபுரி நகா், குமாரசாமிபேட்டையைச் சோந்தவா் எஸ்.சசிகலா (46). இவா், கடந்த 2004-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சோ்ந்தாா். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பணிபுரிந்தவா். பின்னா் காவல் ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்று ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டாா்.

2017 முதல் 2020 வரை 14 போக்ஸோ வழக்குகளில் நீதிமன்றம் மூலம்

ADVERTISEMENT

குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளாா். வழக்குகளில் புலனாய்வு செய்வதில் திறமையாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் சிறந்த புலனாய்வுக்கான விருது அவருக்குத் தோ்வாகியுள்ளாா்.

தற்போது அவா் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT