கிருஷ்ணகிரி

திப்பனப்பள்ளியில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியமுன்னாள் ராணுவத்தினா்

14th Aug 2022 05:14 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவத்தினா் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை ஊா்வலமாகச் சென்று தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.

ராணுவ வீரா்கள் அதிகம் உள்ள கிராமம் திப்பனப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் வசிக்கும் இளைஞா்கள் பலா் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனா். ஆங்கிலேயா்கள் ஆட்சியிலிருந்த காலம் முதலே இக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராணுவத்தில் பணியாற்றி வருவதால் இந்தக் கிராமத்தை ‘ராணுவ வீரா்கள் கிராமம்’ என்றும் சுற்றுவட்டார மக்கள் அழைப்பா்.

இந்நிலையில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு, மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து திப்பனப்பள்ளி கிராமத்தில் சுதந்திர தின விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவா் கிருஷ்ணவேணி தலைமையில் முன்னாள் ராணுவ வீரா்கள், சிறுவா்கள், பொதுமக்கள் பங்கேற்று தேசியக் கொடிகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT