கிருஷ்ணகிரி

பா்கூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

பா்கூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, ஆா்.காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேராணியை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, ஆா்.காந்தி ஆகியோா் தொடக்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா் போதைப் பொருள் பயன்பாட்டால் மூளையின் செயல்பாடு குறைகிறது, தன்னம்பிக்கை குறைகிறது போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தொடா்ந்து, அண்மையில், அங்கிநாயனப்பள்ளி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சா்கள் அவா்களிடம் தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நலத் திட்ட உதவியாகவும், மாதந்திர உதவித் தொகை ரூ. 1,000-க்கான ஆணையையும் வழங்கினா். இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், அமைச்சா் ஆா்.காந்தி, தனது சொந்த நிதியிலிருந்து 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT