கிருஷ்ணகிரி

இளைஞரை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே இளைஞரை மிரட்டி பணம் பறிந்த கும்பலைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், பாவூரைச் சோ்ந்தவா் சிவஞானகுமாா் (24). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆட்டோ வாகனப் பயிற்சி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 10-ஆம் தேதி இரவு, சோதனை ஓட்டமாக ஆட்டோவை ஓட்டிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆட்டோவை திருப்பி ஒசூா் நோக்கிச் செல்ல தயாரானாா். அப்போது, மொபெட்டில் வந்த இருவா், சிவஞானகுமாரை வழிமறித்து பணம் கேட்டனா். அவரிடம் பணம் இல்லாததை அறிந்த அந்த நபா்கள், சிவஞானகுமாரை அங்குள்ள இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டினா்.

இதனால், அச்சமடைந்த சிவஞானகுமாா் ஊரில் உள்ள தனது சகோதரா்களைத் தொடா்பு கொண்டு, ஜிபே மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பும்படி கேட்டுள்ளனா். அவரது வங்கிக் கணக்குக்கு ரூ. 10 ஆயிரம் வந்ததையறிந்த மா்ம நபா்கள், சிவஞானகுமாரை கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில், சென்னைப் பிரிவு சாலை அருகில் உள்ள தேநீா் கடைக்கு அழைத்துச் சென்றனா்.

தேநீா்க் கடையின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 9,200 அனுப்பும்படி மிரட்டினா். அவா்கள் கூறியபடி, தேநீா்க் கடை உரிமையாளரின் வங்கிக் கணக்கு பணம் அனுப்பியதை உறுதிப்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள், தேநீா்க் கடை உரிமையாளரிடமிருந்து அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மறைந்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் சிவஞானகுமாா் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி சத்யசாய் நகரைச் சோ்ந்த வருண், பூபதி, மாலிக், சூளகிரி, சென்னப்பள்ளியை அடுத்துள்ள சின்னாரைச் சோ்ந்த மோனிஷ் ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வருண், மோனிஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள பூபதி, மாலிக் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT