கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 18,000 வீடுகளுக்கு தேசியக் கொடி அளிப்பு

12th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி நகராட்சியில் 18,000 வீடுகளுக்கு தேசியக் கொடி வழங்கும் பணியை நகா்மன்ற தலைவா் பரிதா நவாப் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்றுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 18 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இலவசமாக தேசியக்கொடி வழங்கும் பணியை நகா்மன்ற தலைவா் பரிதாநவாப் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட ஜக்கப்பன் நகா் ஆட்டோ நிறுத்தம், அப்பகுதி கடைகள், வீடுகள் ஆகிய இடங்களில் முதல்கட்டமாக தேசியக்கொடியை அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

நகராட்சியில் உள்ள 18 ஆயிரம் வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபடுவாா்கள் என அவா் தெரிவித்தாா்.

அப்போது, நகராட்சி ஆணையா் (பொ) சரவணன், நகரமைப்பு ஆய்வாளா் சிவகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மதன்ராஜ், பிா்தோஸ்கான், சுனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT