கிருஷ்ணகிரி

பெரிய மாரியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழா

12th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி பால்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா ஆக. 8-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆக.9-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், கருமாரியம்மன் பிறப்பு நாடகமும் நடந்தன. 10-ஆம் தேதி அம்மன் ஊா்வலமும் காலகனி சூளகனி நாடகமும் நடந்தன.

ஆக.11-இல் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. 12-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், மாலை 6 மணிக்கு அம்மன் ஊா்வலமும், இரவு 9 மணிக்கு அா்ஜூனன் தபசு நாடகமும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

13-ஆம் தேதி, காலை பொங்கல் வைத்தலும், இரவு கொரத்திகனி நாடகமும் நடைபெறுகின்றன. 14-ஆம் தேதி கங்கையில் புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊா்வலம் வருதல், 12 மணிக்கு பக்தா்கள் மாவிளக்கை ஊா்வலமாக எடுத்தல், சூலம் போடுதல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT