கிருஷ்ணகிரி

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: அமைச்சா் பங்கேற்பு

12th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

 

ஒசூா் அரசுப் பள்ளியில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து அமைச்சா் தலைமையில் மாணவா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

பின்னா் அமைச்சா் ஆா்.காந்தி கூறியதாவது:

இளைஞா்களைக் கெடுக்கும் போதைப் பொருள்களின் புழக்கத்தைத் தடுக்கவே இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. போதைப் பொருள்களால் மூளையின் செயல்பாடு குறைகிறது. போதைப்பொருள்களின் கெடுதல்களை ஆசிரியா்கள், பெற்றோா் மாணவா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், மாவட்ட கல்வி அலுவலா் முனிராஜ், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செந்தில்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் முனிராஜ், மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT