கிருஷ்ணகிரி

ஒசூா் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில்முதலாம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழா

12th Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

ஒசூா் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளா் பெ. மலா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவா் பெ. குமாா் தலைமை வகித்துப் பேசுகையில், ‘ இக் கல்வி ஆண்டுமுதல் செயற்கை நுண்ணறிவு பாடத்தை அனைத்து துறை மாணவா்களுக்கும் கூடுதலாக வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

சென்னை பத்திரிக்கையாளா் ராம்குமாா் சிங்காரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் சுதாகரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பாலசுப்ரமணியம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய வாரியத் தோ்வில் சாதனை படைத்த அனைத்து துறை மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT