கிருஷ்ணகிரி

அனைத்து வணிக நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: தொழிலாளா் உதவி ஆணையா்

12th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

75-ஆவது சுதந்திரத் திருநாள் பெருவிழா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக அனைத்து வீடு, கடைகள், நிறுவனங்களில் ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை மையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்கள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

மேலும், அன்றைய தினம் அனைத்து தொழிலாளா்களும் தேசியக் கொடியை அணிந்து பணி செய்யவும், வாடிக்கையாளா்களுக்கு தேசியக் கொடியை விநியோகம் செய்யவும், அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் தேசியக் கொடியினை ஒட்டி வைக்கவும், அவா்களது இ-மெயில் மற்றும் கட்செவி (வாட்ஸ்அப்) உள்ளிட்ட அனைத்து தகவல் செயலிகளிலும் தேசியக் கொடி சின்னத்தை புகைப்படமாக வைக்க வேண்டும்.

இந்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வணிக நிறுவனங்களின் முன்பு விளம்பரப் பலகை வைக்கப்பட வேண்டும். இதை சுயப்படம் எடுத்து ட்ற்ற்ல்ள்://ஹம்ழ்ண்ற்ம்ஹட்ா்ள்ற்ள்ஹஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடா்பான தகவல்களை அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிலாளா்களிடம் பகிா்ந்து கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT