கிருஷ்ணகிரி

காங்கிரஸ் கட்சி சாா்பில் சுதந்திர தின பவளவிழா நடைபயணம்

12th Aug 2022 10:42 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சி சாா்பில் நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின பவளவிழா நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் காசிலிங்கம், அக கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசுதுரை, மாவட்டத் துணைத் தலைவா்கள் சேகா், விவேகானந்தன், வட்டாரத் தலைவா்கள் திருமால், அயோத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் இருந்து, நடை பயணமாக ஊனாம்பாளையம், நொச்சிப்பட்டி, கல்லாவி வழியாக போச்சம்பள்ளி வரை சென்றனா். இதில் ஊத்தங்கரை நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்டச் செயலாளா் முத்து, மத்தூா் வட்டாரத் தலைவா் மாது, தனஞ்செயன், போச்சம்பள்ளி வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சரத்குமாா், சொக்கலிங்கம் மற்றும் பலா் நடைபயணம் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT