கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நாளைதனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

11th Aug 2022 12:36 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் ஆக.12-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வார வெள்ளிக்கிழமை அன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.

முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்துக்குத் தகுதி உள்ள வேலைநாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT